புரியப்படவேண்டிய டார்வினிஸம்


சார்ள்ஸ் டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் ஆரம்பகர்த்தாவல்ல. இதனை டார்வினும் குறிப்பிட்டிருப்பார். ஆனால் டார்வின் தான் பரிணாம வளர்ச்சியை இயற்கை தேர்வு என்ற வரையறைக்குள் கொண்டுவந்தார். இயற்கையின் நிலையான தன்மையை முழுமையாக தகர்த்தார். 

இங்கு, பரிணாம வளர்ச்சியையும், அண்டவியலையும் (cosmology) ஒப்பிட்டு நோக்கும் போது ஒரு மெய் சிலிர்ப்பினை (Goosebumps) உணரலாம். அண்டத்தை ஆளும் ஒரு தொகுதி விதிகளுக்கான சாத்தியத்தை உணர்த்ததக்கவை அவை. இருப்பை சுட்டுபவை. அதை நோக்கி செல்ல அகத்தூண்டலை வித்திடுபவை. டார்வினிஸமும் நிலையான உயிரின கட்டமைப்பை தொலைத்து கட்டி, இயற்கை தேர்வை நோக்கி முழுதும் நகர்ந்திருந்தது பின்னாட்களில் அண்டவியல் நகர்ந்தது போல! அண்டவியலில் கூட இந்த கேள்விகள் தொக்கிநிற்பவையே! நிலையான அண்டச்சித்திரத்தை ஹபிள் தொலைத்துகட்டிய பின், அண்டப்பிறப்பிற்கான பெருவெடிப்பென்ற தேர்வு,குறித்த தொகுதி விதிகள் என ஏராளமான கேள்விகள் ஒரு புள்ளியை நோக்கி நகர்பவை ஆகின்றன. இயற்கை தேர்வு என்ற புள்ளி நோக்கி! உண்மையில் அத்தேர்வு எத்தகையது? தேர்வு நியதியை இயற்கை தனக்குத்தானே விதித்தது ஏன்? படைப்புவாதம் (creationism) இயற்கை தேர்வோடு புரியப்பட முடியுமா? ஆரம்ப புள்ளி தவிர்த்து நானும் அந்த ஓர்மை புள்ளிக்கு நகரந்து விட்டேன்.


டார்வினிஸம் என்பது தகவமைவு பற்றியது மட்டுமல்ல. இருந்தாலும் தகவமைவு பற்றி டார்வினிஸம் குறிப்பிடுவது, சூழலுக்கு ஏற்ப உயிரிகள் தகவமைத்துக்கொள்ளத்தக்கவாறு போராடும். போராட்டங்களில் தகுதிபெற்றவை வாழ்கின்றன, தகுதிபெறாதவை மடிகின்றன என்பதே. இங்கு இயற்கை தேர்வு என்ற சொல்லாடல் ஒட்டுமொத்த படைப்புவாதிகளையும் டார்வினுக்கு முன் படைதிரளச்செய்தது.
இத்தனைக்கும் டார்வினின் ஆரம்ப புலம் படைப்புவாத நூலோடு சரிகண்டதே. பேலீயின் படைப்புவாதத்தை சரிகண்ட டார்வினே பின்னாளில் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை The origin of species of natural selection இல் முன்வைத்தார். இந் நூல் வரலாற்றை மாற்றும் பல ஆக்கங்களுக்கும், அழிவுகளுக்கும் அகத்தூண்டலாய் அமைந்துவிடுகின்றன.


ஒபாரின்,டாகின்ஸ் எல்லாம் ஆக்க வழியில் வந்தவர்கள். சிலர் இதனையொட்டி பயங்கரவாதத்தின் ஆணிவேராக டார்வினிஸத்தை சித்தரிக்கமுயல்வதுண்டு, இதற்கு ஒரு சில படைப்புவாதம் சார்ந்த இறையியலாளர்களின் துணைவேறு (தவறாக புரியப்பட்ட படைப்புவாதிகள்). இவ்வாறான பிழையான ஒப்புமை கொண்டோர் அணுகுண்டு என பல நாசகார அழிவுகளுக்கும்,போர்களுக்கும் காரணமாக ஐன்ஸ்டீனினை நொந்துகொள்வதில்லை.


படைப்புவாதிகள் பல சாயங்கள், வேடங்களில்,கபடநாடகங்கள் மூலம் டாவினிஸத்தை தொலைத்துகட்ட பெரும்பாடு பட்டனர். படுகின்றனர். ஒன்றில் டார்வினிஸக் கோட்பாட்டை முழுமையான விதியொன்றாக அவர்கள் கருதுவது காரணமாக அமையலாம். அல்லது படைப்புவாத கொள்கைகளில் அவர்களுக்குள்ள தெளிவின்மையை கூறலாம். இதற்கு ஒரு உதாரணம் கூறலாம் விவிலியம்,குர்ஆனில் ஆறு நாட்களில் பிரபஞ்சம் படைக்கப்பட்டதை நேரடி பொருள்கொள்வதுண்டு. ஆறு காலகட்டங்களை கூறிப்பவை அவை. இதையே டார்வினிஸம் குறிப்பிட்டது, பரிணாம வளர்ச்சிக்கு பல கோடி ஆண்டுகள் தேவை.

 
இப்படி பல பிழையான புரிதல்களும் டார்வினிஸத்தின் முழுமையற்றதன்மையும். இதை விடுத்து படைப்புவாதிகளின் ஒப்புமைகள், வாதங்கள் செல்லுபடியற்றதாகின்றன. உதாரணத்திற்கு பேலீயின் கடிகாரத் தயாரிப்பாளனின் ஒப்பீடு (watch maker analogy) இனை கூறலாம். இதனை டாகின்ஸ் பார்வையற்ற கடிகாரத்தயாரிப்பாளர் (Blind watch maker) என்ற ஒப்புமை மூலம் நிராகரித்திருப்பார். இதை விடுத்து மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் என டார்வினின் மனித பரிமாணம் பற்றிய நூல்களில் வெளிவந்த கருத்தையொட்டி டார்வினின் நண்பர் ஹக்ஸ்லியை, நீங்கள் எந்த தரப்பு குரங்கு வழியை சார்ந்தவர்? என அவாதனங்களையொட்டி எழுந்த கருத்துக்களை வெறும் கேலிகள் மூலமே தவிர்த்து வந்தனர்.

டார்வினிஸ்டுகள் ஓர்மைபுள்ளி நோக்கி நகர கிரியேஷனிஸ்டுகள் அதற்கெதிரான திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். இந்நிலை மாறி ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் social darwinism எனும் சிறைக்குள் முழுவதும் டார்வினிஸத்தை சிறைப்படுத்திட நினைப்பதும் ஒரு வித கிரியேஷனிஸ்டுகளின் மனநிலையே!
டார்வினஸம் புரியப்பட வேண்டியதொன்று.


Comments