BRUNO STILL ALIVE
புரூனோவை அறிய பண்டைய சமூகவியல் பின்புலமும் அறிந்திருப்பது அத்தியாவசியம். பல்லாயிரமாண்டு பின்புலம் கொண்ட வானவியல் (astronomy) வரலாற்றின் தொடக்கத்தில் மனிதர்கள் ஆன்மிகத்தையும் சேர்த்து கலப்படம் செய்ய தொடங்கி வான்பொருள்களுக்கு (celestial object) ஆன்மிக அந்தஸ்து வழங்கத்தொடங்கினர்.
தேலஸ் போன்றோர் அதை மறுத்துரைத்து வானியல் மாதிரியுருக்களை உருவாக்கிய போதும் கூட அண்டத்தின்(universe) மையமாக பூமியை கருதிய Geo centric model களே உருவாகின அதிலும் கூட அரிஸ்டோடிலின் சிந்தனையின் influence காரணமாக தோன்றிய ptolemy model எல்லாம் கத்தோலிக்ஸ் வேதாகமத்துக்கு ஒத்திசைவதாக இருந்தது.
அடிநாதமாக இருந்தது.
இதனால் மாற்று கருத்து தெரிவித்ததாக தெரிந்தாலே பிஷப்புகளும், கார்டினல்களும் கூடி விடுவர் இறப்புச்சான்றிதழை எழுத! Helio centric model களை அங்கீகரிப்பதற்கு Galileo வரை இறப்பச்சான்றிதழ் தேவை பட்டது. Helio centric ideology ஐ அறிந்திருந்த கொப்பனிகஸ் இனாலும் கூட வாய் திறக்க முடியவில்லை அரசல் புரசலாக வெளிப்படுத்தினாரே ஒழிய வகுத்துரைத்துவிடவில்லை சமயகுருவாக இருந்ததால் திருச்சபைக்கு தெரிந்தால் தலை தனி முண்டம் தனியாகி விடுமே! புரட்டஸ்டன்ட் வளர்ச்சியை தடுக்க கத்தோலிக்ஸ் புரட்டஸ்டன்ட் இற்கு எதிராக கெடுபிடிகளை முடுக்கிவிட்டிருந்தது. ptolemy model கத்தோலிக்ஸ்ஸின் வேராக காணப்பட்டதால் அதனையே மறுத்துரைப்போரை கொடூர தண்டனையால் ஒடுக்கியது.
16 ம் நூற்றாண்டு அரிஸ்டோடிலின் சிந்தாந்தங்களை மறுப்பதுக்கும் மறுசீரமைத்து கட்டியெழுப்புவதுக்குமே நேர்ச்சை செய்து விடப்பட்டதொன்றாயிற்று! Helio centric model ஐ வெளிப்படையாக பிரச்சாரம் செய்தவர் என்பவதை விட திருச்சபையின் Geo centric model ஐ வெளிப்படையாக எதிர்த்தவர் ஜியார்டானோ புருனோ. சூரியனும் மற்ற விண்மீன் போல சாதாரண விண்மீன்,பூமி மற்றவை போல ஒரு சாதாரண கோள், சூரியகுடும்பம்(solar system) சூரியனை மையமாக கொண்டது,பூமி தன்னை தானே சுற்றுகிறது,ptolemy model போல அண்டம் ஒன்றும் முடிவுள்ளது (finite) அல்ல என திருச்சபைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதோடு கத்தோலிக்க கருத்துக்கள் பலவற்றையும் சாடினார். எனவே அவரை எரித்து அவரது கருத்துக்களையும் எரித்து விடலாம் என நப்பாசை கொண்டு ரோம் சதுக்கத்தில் வைத்து பலரும் பார்க்க எரிக்கப்பட்டார். ஆனால் தொலைநோக்கிகள் வழக்குக்கு வந்து கத்தோலிக்ஸின் பூமியின் ஆன்மிக அந்தஸ்து இழக்கப்பட்ட பிற்பாடு வருத்தம் தெரிவிக்கும் முகமாக அவருக்கு சிலையும், சந்திரனில் உள்ள குழி ஒன்றுக்கு புருனோவின் பெயரையும் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது வரலாறு.
புருனோவால் உந்தப்பட்ட பாவத்துக்கு கலிலியோவும் அவஸ்தைப்பட்டார்.
Comments
Post a Comment