Great Before and Great beyond
Soul (2020)
Astral travel/Astral projection
நம்ம உயிரை ஒரு கண்ணாடி ஜாடியில் அடைபட்ட வாயுக்கு ஒப்பிடலாம்.இந்த வாயு கண்ணாடி ஜாடியை விட்டு வெளியே வந்தால் எப்படி நடந்து கொள்ளும் என்கிறது தான் Astral travelனு சொல்லலாம்.அதாவது, நம்ம உடம்பை விட்டு உயிர் வெளியே வந்து பயணம் செய்தால் எப்படி இருக்கும்? அந்த பயணம் தான் Astral travel.
Astral travel ங்குறது Science and Religion இடைவெட்டும் புள்ளி (Intersecting point) என்று சொல்லலாம்.இந்த கருத்துரு சம்பந்தமான ஊகங்கள் (Speculations) பலவும் விஞ்ஞான மற்றும் சமயபுலங்களில் நிறையவே காணப்படுகின்றன.இருப்பினும் அவை வெற்று ஊகங்களாகவே காணப்படுகின்றன.
2017 இல் வெளியான Coco இற்கும் Soul இற்கும் பெரியளவில் Similiarity இருப்பதாக தோன்றினாலும் Climax ரெண்டையும் தனித்துவமான படைப்புகளாக ஆணித்தரமாக நிறுவுகிறது.
Middle school band teacher ஆன ஜோ கார்ட்னர் தான் கதாநாயகன். பியானிஸட் ஆகவேண்டும் என்ற கனவை துறத்த காலம் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்க மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் ஆடிய படி வீடு வரும் ஜோ கார்ட்னர் வழியில் ட்ரைனேஜ்ஜினுள் விழுந்து விடுகிறார் அங்கு Cut செய்யப்படும் காட்சி மீண்டும் Great beyond எனும் மரணத்திற்கு அப்பாலான வாழ்க்கைக்கான பாதையில் தொடங்குகிறது.ஆம் ஜோ கார்டனர் இறந்துவிட்டார். (உயிரற்ற உடல் Coma stage இல் வைத்தியசாலையில் காணப்படுகிறது)
ஜோ கார்ட்னரை போல இறந்துவிட்ட பின் உயிர்கள் எல்லாம் இங்கு(Great beyond) வந்துசேர்கிறது. உயிர்கள் எல்லாம் நீலநிற பொம்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உயிரின் நிறம் நீலம் என்பதாக அறிவியல் ஊகங்கள் நிலவுகின்றன. அதனடிப்படையிலான சித்தரிப்பாக கூட இருக்கலாம். உண்மையை அறியும் ஜோ கார்டனர் பதறி ஓடி Great before எனும் இடத்திற்குள் வந்து சேர்கிறார்.Great before என்பது பிறப்பிற்கு முதல் உயிர்கள் காணப்படும் ஓர் இடம்.
Great Before மற்றும் Great Beyond Science and religion இல் காணப்படும் ஏற்புடைய ஊகங்களின் அடிப்படையில் பொதுப்புத்திக்கு ஏற்புடைய வண்ணம் சித்தரிக்கப்பட்டுள்ளது Animated film என்ற வகையில் பெரிய ப்ளஸ் என்று தான் சொல்ல வேண்டும்.உடலை விட்டு பிரிந்த ஜோ காரட்னரின் உயிர் உடலை வந்து சேர்ந்ததா? அதில் நிகழும் குழறுபடிகள் என்ன? ஜோ கார்ட்னரின் வாழ்க்கையின் அந்த திருப்புப்புள்ளி என்ன? என்பது தான் கதை.
உயிரின் நோக்கம் என்ன? என்பதை ஜோ கார்ட்னர் புரிந்துகொள்ளும் ப்ரேம்கள் வாழ்க்கை பற்றிய ஆழமான அழகிய பார்வையையும் அலாதியான அன்பையும் நம்பிக்கையையும் விதைத்துச் செல்கின்றன.
Soul வெறுமனே சிறார்களுக்கான Animated film அல்ல எல்லா தரப்பினரும் கொண்டாட வேண்டிய சிறப்பான படைப்பு!
Nice Bro 🌛
ReplyDelete