வரலாறு முக்கியம் அமைச்சரே!

Analogy with brief history of Gravitational theory

"Ideas, like large rivers, never have just one source" என willy ley தன்னுடைய Men in space எனும் Book இல் குறிப்பிட்டிருப்பார்.
அது எவ்வளவு ஆழமான உண்மை.
உதாரணத்திற்கு; Gravitational theory ஐ எடுத்துக்கொள்வோம்

இன்றைக்கு Newtonian gravity தாண்டி Genaral theory of relativity (GRT) தாண்டி Quantum frame க்குள்ள gravity ய கொண்டு வந்திருக்கிறோம். Gravitational theory ய Macro scale to nano scale க்கு கொண்டு வந்திருக்கம். இப்போ இந்த gravitational theory யோட evolution பற்றி பார்த்தா,

அது மனித நாகரிகம் ஆரம்பமானதிலிருந்தே தொடங்கும் அதாவது BC 5000 இலிருந்து பயத்தின் பேரில் விசித்திரமான வான்பொருட்களை காலநிலை மாற்றத்திற்கு காரணமான தெய்வீக அம்சம் பொருந்தியதாக பாபிலோனியரும்,எகிப்தியரும் கருதினர் பிற்பாடு அவை வழிபாடுகள் இல்லாத போதும் ஏதோ விதிக்கு கட்டுண்டதாக அவற்றின் வழமையான பாதையிலே இயங்குகின்றன எனும் போது அவை அவற்றின் தெய்வீக அம்சத்தை இழந்தது ஆயினும் பயிர்ச்செய்கை,பருவகாலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தை வானியல் தரவுகளை சேகரித்து முன்னாயத்தம் செய்யப்பழகினர். வானியலோடு இணைந்து எண் கணிதமும் எழுத்தும் வளர்ச்சியுற்றது.
பாபிலோனிய,எகிப்திய,சிந்து சமவெளி நாகரிகம் தாண்டி,

BC 7 ம் நூற்றாண்டில் கிரேக்கரிடம் விஞ்ஞான துறை வளர்ச்சி பெற்றது. கிரேக்கர்களில் பைதகரஸ் பூமிக்கு தட்டையென கேத்திரகணித உருவமும் geo centric model ஐயும் முன்வைத்தார். அரிஸ்டோடில், பைதகரஸின் கேத்திர உருவை மறுதலித்து பூமியின் கோள உருவை நிறுவினார்.பூமியின் மையத்தை நோக்கி பொருள்கள் விழுவதை இயற்கை நிலை (natural state) or tendency toward the center of the universe என்ற கருத்து மூலம் விளக்கினார். அத்தோடு இயக்கவியல் விதிகளையும் முன்வைத்தார்.கலிலி வரும் வரை அரிஸ்டோடிலின் இயக்கவியல் எண்ணக்கரு மாற்றியமைக்கப்படவில்லை.

கலிலியோவின் இவ்வியக்க மாதிரிகள் மற்றும் கொப்பர்னிகஸ்ஸின் Helio centric model அத்தோடு டைகோ பிராஹேயின் அவதானங்கள் கெப்ளரின் விதிகளுக்கு வழி சமைத்தன. கெப்ளரின் விதிகளில் கோள்களின் பாதை பற்றிய தெளிவின்மை நியூட்டனை universal gravitational theory ஐ நோக்கி இட்டுச்சென்றது.
நியூட்டனின் ஈர்ப்பு விதி புதனின் சுற்றுவட்டப்பாதையின் எதிர்வுகூறலில் விட்ட தவறு மற்றும் ரோமர் ஒளியின் வேகத்தை முடிவுள்ளதாக்கியதால் particle wave duality படி ஒளித்துணிக்கைகளில் ஈர்ப்பின் செல்வாக்கை விளக்க GRT ஐ ஐன்ஸ்டீன் வெளியிட்டார். ஆயினும் பிளாங் தொட்டு போர் என உருப்பெற்ற Quantum theory ஐன்ஸ்டீனின் Gravity என இயற்கையை ஆளும் விதிகள் இரு தரப்பாயின இரண்டையும் இணைக்கும் ஒரு முயற்சியென quantum gravity ஐ கூறலாம்.

ஆக Gravity concepts வானியல் அறிவு பயத்தின் பேரில் celestial bodies ஐ வியந்து தெய்வீக அம்சமாக நோக்கிய போதிலிருந்தே வளர்ச்சியுற்றது. Gravity concept இன் source ஆக நியூட்டனின் thought experiment or apocryphal apple story ஒருக்காலும் அமையாது.
ideas like a large river என்று இதை தான் முன்னமே குறிப்பிட்டிருந்தேன்.
 cosmology பற்றிய அறிவின் விரிவாக்கம் ஈர்ப்பு பற்றி மேலும் ஆழமான புரிதலை ஏற்படுத்தி அண்டத்தின் பல கேள்விகளுக்கும் விடையாக அமையும்

Comments