ஐந்தாவது ஒன்று இருக்கிறதா?


ஐந்தாம் விரல் ஒரு யூகம்
இயற்கையின் அனைத்து விதமான இயக்கங்களையும் அடிப்படையான நான்கு இடையீர்ப்பு/விசையினால் விளக்கிட முடியும்
ஈர்ப்பு விசை,மின்காந்தவிசை, வலிமையான மற்றும் வலிமை குன்றிய அணுக்கருவிசைகள் என்பவையே அவை நான்கும்
அதாவது அண்டம் முதல் அணுவின் இயக்கம் வரை அனைத்துவிதமான வினாக்களுக்கும் விடையாக இவை அமைந்தன.

ஆனால் பல வழக்கத்திற்கு மாற்றமான அவதானிப்புகளுக்கு நடைமுறையிலுள்ள இவ் இயற்பியற் கோட்பாடுகளால் விடையளிக்கமுடியவில்லை இது இயற்பியலின் புதியதொரு எண்ணக்கருவை வேண்டி நின்றது
அதற்கான ஒரு கருதுகோலாக சில விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட கோட்பாடே ஐந்தாம் விசையாகும்.

அதிலும் குறிப்பாக அண்டவியலின் சில கண்டுபிடிப்புக்கள் ஐந்தாம் விசைக்கான தேடலை மேலும் துரிதப்படுத்தியது

சுருங்கச் சொல்வதானால்
1930 களில் சுவிஸ் வானியலாளரான Fritz Zwicky, Coma cluster களுக்குள் விண்மீன் திரள்கள்(Galaxies) எவ்வாறு நகர்கின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
(கோமா கிளஸ்டர் வானத்தில் சுமார் இரண்டு டிகிரிகளில் பரவியுள்ள சுமார் 1,000 விண்மீன் திரள்களைக் கொண்டது)
கோமா கிளஸ்டரினுள் விண்மீன் திரள்கள் ஈர்ப்பால் நிலைத்திருக்க தேவையான
கணக்கிடப்பட்ட திணிவிலும் குறைவான திணிவு இருப்பையே அவதானிக்கமுடிந்தது.
ஆகவே கோமா கிளஸ்டரில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியால் கணக்கிடப்படாத ஒரு பெரிய அளவு பொருள் இருக்க வேண்டும் என்று அவர் நியாயப்படுத்தினார். Zwicky அதனை "Dark matter" என்று அழைத்தார்.
Zwicky உட்பட பெரும்பான்மை விஞ்ஞானிகள் இவ் அவதானிப்பை Dark matter இற்கான ஆதாரமாக கொண்ட போதும்,
சில விஞ்ஞானிகள் இதனை ஐந்தாம் விசைக்கான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
அதனாலேயே கோமா கிளஸ்டரினுள் பல விண்மீன் திரள்களை நிலைத்தியங்கச் செய்ய முடிகிறது என்கிறார்கள்.

ஐந்தாம் விசைக்கான பிறிதொரு வலுவான ஆதாரம் 1924  எட்வின் ஹபிளால் முன்வைக்கப்பட்ட பிரபஞ்ச விரிவுக்கொள்கை ஆகும்.
1915 இல் பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிடும் போது  ஐன்ஸ்டீன் கூட அண்டம் நிலையானது என உறுதியாக நம்பினார்.
ஒளி ஓர் பிரபஞ் தூதுவன் அவன் சுமந்து வரும் சேதிகளிலிருந்தே இன்று நாம் 4000 இற்கும் அதிகமான Exo planet களை கண்டுபிடித்துள்ளோம்,வானியல் பொருட்களின் (Celestial objects) வெப்பனிலை,தூரம்,அதிலுள்ள கணிமங்கள்,மூலகங்கள்...... என வானியல் துறை கண்டுபிடிப்பு,அளவீடுகள் யாவுக்கும் வழிகோலுவன ஒளியே!
இவ்வாறே ஒளியை கொண்டு பிரபஞ்ச விரிவை கண்டுபிடித்தார் ஹபிள்.
சரியாக சொல்வதானால் ஒளியின் Doppler shift மூலமாக
(Doppler shift ஐ ஒரு அம்பியுலன்ஸ் மூலம் விளக்கினால் அம்பியுலன்ஸ் நம்மை நோக்கி வரும் போது சத்தமாகவும் விலகிச்செல்லும் போது சத்தம் குறைவாக உணர்வதை சொல்லலாம் இவ்வாறே மிகவேகமாக பயணிப்பின் நிறம் மாறுவதையும் பார்க்கலாம்
அலைகள் யாவும் இந் நடத்தையை காட்டும்)
பல விண்மீன்களின் நிறமாலைகளுக்கு இடையில் வேறுபாடு காணப்படும் இருந்த போதும் அவற்றில் ஓர் ஒற்றுமை கண்டார்.
அதாவது Red shift இதன் புரிதல் யாதெனில் பல திரள்கள்,விண்மீன்கள் எம்மை விட்டு விலகிச் செல்கின்றன.
ஆகவே இந்த பிரபஞ்சம் தொடர்ந்தும் விரிவடைந்து கொண்டு செல்கிறது.
இந்த விரிவடைதலுக்கு காரணம் "Dark energy" தான் என பெரும்பான்மை இயற்பியலாளர்கள் ஒரு மனதே ஏற்றுக்கொள்கிறார்கள்.
இருந்த போதும் சில இயற்பியலாளர்கள் இந்த விரிவை ஐந்தாம் விசை எனும் யூகத்தால் விளக்க முற்படுகிறார்கள்.

எது எவ்வாறாயினும் மின் மற்றும் காந்தவியல் பற்றிய மெக்ஸ்வெல்லின் மாறுபட்ட புரிதல் எம்மை அறிவியலின் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்சென்றது.
அது போலவே இன்று சில இயற்பியலாளர்களின் யூகமாக முன்வைக்கப்படும் ஐந்தாம் விசை பற்றிய கோட்பாடு எம்மை அறிவியலின் அடுத்த யுகத்திற்கே அழைத்துச்சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Comments