DEAD CAGE
உதாரணத்துக்கு,
சுவரிலும்,வீட்டுக்கூரையிலும் தலைகீழாக பல்லி போகுதே ஈர்ப்பு விதியை மீறுதா என்ன?
இல்லவே இல்ல
It is called static electricity
இது பற்றி இன்னுமொரு பதிவில் பார்க்கலாம்.
இதன் ஒரு பயனான பரடேயின் கூண்டு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நம்பலனா உங்க ஒரு phone எ டிபன் பாக்ஸ்ல வச்சு மூடுங்க. இப்ப அந்த போனுக்கு கோல் பண்ணுங்க.
டடா! என்ன அதிசயம் போன் ரிங் ஆகவே இல்ல! அப்டிதானே
(பிற்குறிப்பு- silent ல போடாத phone தான்)
What the hell is this!
உலோகம்(metal) அலோகம்(non metal) இரண்டை பற்றியுமே நமக்கு தெரியும். உலோகத்துர கட்டமைப்புக்குள்ள போய் பார்த்தா அங்க இலத்திரன் கடல்ல உலோக கற்றயன் கப்பலப் போல மிதந்த வண்ணம் இருக்கும்.
ஆனா அலோகத்துல எல்லாமே பிணைக்கப்பட்டிருக்கும்.
(உலோகத்தால் கடைசி ஆர்பிட் இலத்திரன்கள கவர்ந்து வச்சிக்கமுடியாது)
(ஒத்த ஏற்றம் ஒன்றை ஒன்று கவரும்
ஒவ்வாத ஏற்றம் ஒன்றை ஒன்று தள்ளும்)
இப்போது இந்த உலோகத்தினருகே ஒரு பாஸிடிப் சார்ஜ்ஜை கொண்டுவந்தால் நெகடிவ் இலக்ட்ரான் எல்லாம் பாஸிடிவ் சார்ஜின் அருகே வரும்.
இதனால் உலோகத்தினுள் ஒரு புறம் நெகடிவ் சார்ஜ் உம் மறுபுறம் பாஸிடிவ் சார்ஜ் ஆகவும் காணப்படும்.
இது தான் induction ஆகும்.
சுருக்கமா முடிக்குறன் இந்த சார்ஜ் ரீஅரேன்ஜ்மென்டால external electric field எ internal electric field இல்லாமல் செய்துடும் so net electric field(மின்புலம்) = 0
தடைசெய்யும் காரணம் பரடே கூண்டினுள்ளே electric field = 0
(மின்காந்த அலை மின்புலம்,காந்தபுலம் இரண்டையும் கொண்ட அலைகள்)
*மைக்ரோ ஓவன் இதுவும் பரடேயின் கூண்டு அதனால தான் உள்ளே உள்ளது மட்டும் ஹீட் ஆகுது
(radiation ல இருந்து தப்பிச்சம்)
*USB cable,TV cable(coaxible cable) எ சுத்தி பரடே கூண்டிருக்கும் (அண்ரனா வயரா அடிக்கடி சரிசெய்யும் போது பார்த்திருப்பீங்க)
இது signal லீக் ஆவதை தடுக்கும்
*MRI ஸ்கேனர்லயும் பரடே கூண்டு இருக்கு. இது வெளி புலங்களிலிருந்து பாதுகாத்து சரியான தரவை பெற உதவும்
*High voltage மின்சார கம்பங்களில் வேலை செய்வோர் அணியும் உடை ஒரு பரடே கூண்டே!
இது குறித்தளவு high voltage மின்சார கம்பங்களில் வேலை செய்யும் போது மின் உடலூடு பாயாது தடுக்கிறது
*கார்,விமானம் என பெரும்பாலான வாகனங்களில் இருக்கும் உலோக மூடுபடை பரடேகூண்டு தான்
இது மின்னலிலிருந்தும் எம்மை பாதுகாக்கும்
*டிஜிடல் எவிடன்ஸ தடயவியல் நிபுணர்கள் பரடே கூண்டிலே வைத்து பாதுகாப்பார்கள்
(can't hack)
இப்டி பல பயன்....
(அப்டினா தோரால (மார்வெல்) Faraday cage ல மின்னல வரவைக்க முடியாதா?
அது அந்த cage properties ல தான் தங்கியிருக்கு)
https://youtu.be/pjw5gbkRTaY
https://youtu.be/x7uCAvEhP1E
https://youtu.be/ve6XGKZxYxA
அது சரி எதுக்கு மரணகூண்டுனு சொன்னன்?
High voltage டெஸ்லா coil அருகே பரடே கூண்டுல யாராவது நிற்பாங்க tesla coil கும் பரடேகூண்டுக்கும் இடையே மின்னல் உருவாகும் உள்ள இருக்கும் நபருக்கு எதுவுமே ஆகாது. இத பலரும் try பண்ணுவாங்க
so அதனால தான் பரடே கூண்ட மரண கூண்டுனு சொன்னன்.
Comments
Post a Comment