வர்த்தகப் பொருளான செவ்வாய் (Mars)


Aliens ஐ தேடிய விஞ்ஞானிகள் கல்லில் நாருரிப்பதை விடுத்து வாடகைக்கு வீடு தேட ஆரம்பித்தார்கள்.
ஆமாம் மனிதன் வாழ உகந்த கிரகத்தை தேடினார்கள்.

விண்வெளி ஆய்வில் 1937 Grote rober கண்டுபிடித்த Radio telescope ஒரு மைற்கல் எனலாம். ஏனெனில் ஹைட்ரஜன்(1.4GHz),ஹைட்ராக்ஸைட்குரிய(1.7GHz) frequency இல் கதிர்கள் பதிவானால் அந்த கிரகத்தில் நீர் நிலவுகை உறுதியாகும்.அத்தோடு உயிர் நிலவுகையும் உறுதியாகும். நாம் புதுமனைபுகு விழா கொண்டாடி பால் காய்ச்சலாம்

இவ்வாறு தேடிய விஞ்ஞானிகளுக்கு செவ்வாய்க் காய்ச்சல் பிடித்தது.
அதன் விளைவால் 1976 அமெரிக்கா வைகிங் ஆய்வு கலங்களையும் 1988 ரஷ்யா போபோஸ் ஆய்வுகலங்களையும் செவ்வாய்க்கு அனுப்பியது

இதற்கிடையில் வர்த்தகர்களும்,டைரெக்டெர்களும் செவ்வாயை கொண்டு காசு பார்த்தனர். உதாரணத்துக்கு செவ்வாய்வாசிகள் பாவிப்பது kirk soap வகையாம் என விளம்பர படுத்தியது ஒரு கம்பெனி
(அடப்பாவிகளா!)

செவ்வாயில்(சிவப்பு கிரகம்) ஏறத்தாழ 400 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என தொல்லுயிர் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எது எப்படியாயிருப்பினும் செவ்வாயில் ஆக்சிஜன் இல்லை. அதை கூட உற்பத்தி செய்ய மாற்றுவழிகள் கண்டுபிடித்தாயிற்று. நீர் கூட உறைநிலையில் இருக்கிறது. பிரச்சினை செவ்வாயின் ஓசோன் படை,வளிமண்டலம்,காந்தபுலமும் ரொம்ப ரொம்ப பலஹீனமானது! ஈர்ப்பு விசை கூட புவி ஈர்ப்பின் 38 பெர்சன்டேஜ் தான்!

(மார்சியன் திரைப்படம் ஞாபகம் வருதா?)

இருந்தும் இன்னும் ஆய்வுகள் முன்னோக்கியே செல்கின்றன. அதற்கு நமக்கு தெரிந்த மங்கள்யானை கூடச் சொல்லலாம்.
ஆனாலும் செவ்வாய் விடுத்து வேறு வீடுகளையும் பற்றிய தகவல்களையும் அனுப்பிய வண்ணம் இருக்கிறது வாயஜேர் கலம்! எதிர்பார்ப்போம் நம்பிக்கையுடன்!!!

புளுட்டோ சொன்ன மாதிரி நாம் ஒரு குகைக்குள் வாழ்ந்துகொண்டு பிற உலகங்களிலிருந்து நமது சுவர்களில் விழும் நிழல் பதிவுகளையே சேகரித்து கொண்டிருக்கிறோம்.

Comments