அன்னையர் தினம் நெபியுலாக்களுக்கு சமர்ப்பணம்
நெபியுலாங்ரது நட்சத்திரத்த உருவாக்கும் தூசுகளையும்(cosmic dust), வாயுக்களையும் (குறிப்பா ஹீலியம்,ஹைட்ரஜன கொண்டிருக்கும்) வன்மையான முகில்.
சிம்ப்ளா சொன்ன நட்சத்திரத்துர அம்மா!!!
(கஷ்டமா இருந்தா fan எ medium speed ல சுற்ற விட்டு அண்ணார்ந்து பாருங்க இது தான் நான் சொன்ன சம்பவம்)
மேலும் மேலும் வேகமாக சுழல (இப்போ fan எ high speed ல வச்சு அண்ணார்ந்து பாருங்க) தொகுதி மேலும் ஒடுங்கி திணிவு அதிகரிக்க
உயர் வெப்பனிலையில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும். இதன் போது பிரகாசமான நட்சத்திரம் உருவாகும்.
சூரியன்,வெகா,சிரியஸ் எனும் குழந்தைகள் இப்படி பிறந்தவையே! சூழ உள்ள ஏனைய தூசு துகள்கள் ஈர்ப்பால் ஒடுங்கி கோள்களாகவும், எரிகற்களாகவும் குறித்த நட்சத்திரத்தை சுற்றி வரும்.
(நம்ம சூரிய குடும்பம் மாதிரி)
இந்த பிரசவத்துக்கு பல மில்லியன் ஆண்டு காலம் எடுக்கிறது.
சூரியனளவு நட்சத்திரம் எரிபொருள்/ஹைட்ரஜன் முடியும் தருவாயில் வெளிப்பகுதி செவ்வாய் வரை விரியும் இந் நிலை செவ்வசுரன்(red giant) எனப்படும்.
செவ்வசுரன் வெடித்து சிதற வெளிப்பகுதி planetary nebula ஆகவும் உட்பகுதி வெண்குள்ளனாகும்(white dwarf). பல மில்லியன் ஆண்டுகளின் பின் வெண்குள்ளன் கருங்குள்ளனாகும்.
Comments
Post a Comment